தின்பண்டங்கள் கொடுக்க மறுத்த விவகாரம்: கிராம நிர்வாக அலுவலர் அதிரடி மாற்றம்!

தின்பண்டங்கள் கொடுக்க மறுத்த விவகாரம்: கிராம நிர்வாக அலுவலர் அதிரடி மாற்றம்!
Published on
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே பாஞ்சாகுளம் கிராம தீண்டாமை விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மாற்றப்பட்டுள்ளார்.

வைரலாகிய வீடியோ:

பாஞ்சாகுளம் கிராமத்தில்  இருவேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஊர்க் கட்டுப்பாடு எனக் கூறி ஒரு தரப்பு பள்ளிக் குழந்தைகளுக்கு மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த கடைக்காரர் பொருட்கள் தர மறுத்து திருப்பி அனுப்பியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

ஊருக்குள் வர தடை:

இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டு, தீண்டாமை தடுப்புச் சட்ட வழக்குப் பதிவு செய்து காவல்துறை கைது நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் சாதிய பாகுபாட்டோடு நடந்து கொண்டு குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் ஊருக்குள் வரத் தடை விதித்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் பாஞ்சாகுளம் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா என்பவர் அப்பணியில் இருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பன் என்பவரை  நியமனம் செய்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com