குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா.. அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்பு!!

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா.. அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்பு!!

குற்றாலத்தில் சாரல் திருவிழாவை அமைச்சர்கள் கே.கே. எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சாரல் திருவிழா

குற்றாலத்தில் சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சாரல் திருவிழா தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக நேற்று கலைவாணர் கலையரங்கத்தில் தொடங்கியது.

குத்துவிளக்கு ஏற்றி விழா தொடக்கம்

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே. எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து பாரம்பரிய கிராமிய கலைஞர்களுக்கு அமைச்சர்கள் விருது வழங்கினர். அப்போது பேசிய  அமைச்சர் ராமச்சந்திரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் பல்வேறு தொழில்கள் தொடங்க முதலீடுகள் வந்துள்ளதாகவும், இதனால், தமிழகத்திற்கு இது பொற்காலம் என்றும் பெருமைபட கூறினார்.