ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தலைவரான 21 வயது இளம்பெண் சாருகலா...

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 21 வயது இளம்பெண் சாருகலா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒரு வாக்கு  வித்தியாசத்தில் வெற்றி பெற்று தலைவரான 21 வயது இளம்பெண் சாருகலா...

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த இருகட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.  இதில் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 21 வயது இளம்பெண் சாருகலா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்று கொண்டார்.இது குறித்து பலரும் ஆச்சரியப்பட்டு இவருக்கு தற்போது பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.