செங்கல்பட்டு: மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து.. உடல் நசுங்கி இருவர் பலி!!

அச்சிறுப்பாக்கம் அருகே மினி லாரி மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதிய விபத்தில் சம்பவ இடத்திலையே இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு: மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து.. உடல் நசுங்கி இருவர் பலி!!
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

உடல் நசுங்கி இருவர் பலி:

அப்போது, அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் ஒன்று அந்த மினி லாரியின் பின் பகுதியில் வந்து மோதியதில் சம்பவ இடத்திலையே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலையே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

மாணவர்களின் தகவல்:

இவர்கள் இருவரும் அச்சுறுப்பாக்கம் அருகே உள்ள அமணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவரின் மகன் சஞ்சய் +1 படிக்கும் மாணவர் மற்றும் ராமன் என்பவரின் மகன் சஞ்சய் +2 படிக்கும் மாணவர் என்பது தெரியவந்தது.

திருவிழா முடிந்து பின்னர் நடந்த சோகம்:

அமணம்பாக்கம் கிராமத்தில் திருவிழா நடைபெற்றுள்ளது. இரவு கூத்து பார்த்துவிட்டு தூக்க மயக்கத்தில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து உள்ளதாகவும் இதனால் இந்த விபத்து நடந்து இருப்பது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com