சென்னை விமான போக்குவரத்து அறிக்கை... 2070ல் வளர்ச்சி எப்படி இருக்கும்?!!

பரந்தூர் விமான நிலையத்தின் விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய கோரப்பட்ட டெண்டர் கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிப்பு.

சென்னை விமான போக்குவரத்து அறிக்கை... 2070ல் வளர்ச்சி எப்படி இருக்கும்?!!

பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையம் அமைப்பதற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டர் கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே சில ஒப்பந்ததாரர்கள் முன்வந்துள்ள நிலையில் கூடுதலாக ஒப்பந்ததாரர்களையும் சேர்ப்பதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக நீட்டிக்கபப்ட்ட கால அவகாசம் கடந்த 6 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் தற்போது பிப்ரவரி 27 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து, விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய டெண்டர் கோரப்பட்டிருந்தது.

விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், மேம்பாட்டு பணிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சமூக தாக்க மதிப்பீட்டு அறக்கை, விமான நிலைய மேம்பாடு தொடர்பாக மாஸ்டர் பிளான், திட்ட வரைபடம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் இந்த டெண்டர் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் விமான போக்குவரத்தின் வளர்ச்சி, 2023-24 ஆண்டு முதல் 2069-70 ஆண்டு வரை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் விமான போக்குவரத்து எந்த அளவுக்கு அதிகரிக்கும் ஆகியவை தொடர்பாகவும் அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  அண்ணாசாலை இடிபாடு விபத்து... ஜாமீன் மனு தள்ளுபடி....