சென்னை "Chepauk Stadium" 139 கோடியில் மெகா பிளான்.. 18 கண்டிஷன்ஸ் போட்ட தமிழக அரசு!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தை 139 கோடி ரூபாயில் புதுப்பிக்க 18 நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை "Chepauk Stadium" 139 கோடியில் மெகா பிளான்.. 18 கண்டிஷன்ஸ் போட்ட தமிழக அரசு!!

சென்னை சேப்பாக்கம் மைதானம் விரிவாக்கம் மற்றும் விரிவான திட்ட அறிக்கையுடன் புதுப்பித்தலுக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

தற்போது, 139 கோடி ரூபாயில் சென்னை சேப்பாக்கம் மைதானம் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தலுக்கு தமிழ்நாடு அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

மைதானத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை எடுத்துச் செல்லும் முறை மற்றும் அதற்கான திட்டத்தை முறைப்படி தயார் செய்ய வேண்டும் - புதிய கட்டுமானத்தால் அருகில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 18 நிபந்தனைகளுடன் இந்த அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதனால், சேப்பாக்கம் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியிலிருந்து 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம், கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் உலசின் சிறந்த மைதானமாக சேப்பாக்கம் மைதானம் உருவாகவுள்ளது.