குஜராத்திற்கு செல்ல இருந்த பெண் திடீர் மரணம்!

புவனேஸ்வரில் இருந்து சென்னை வந்த குஜராத் பெண் இறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத்திற்கு செல்ல இருந்த பெண் திடீர் மரணம்!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு கிரி (45).இவா் தொழில் அதிபர். இவருடைய மனைவி கமலா பீன் (40). இருவரும் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தனர். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து அகமதாபாத் செல்ல காத்திருந்தனர்.

அப்போது கமலா பீனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக விமான ஊழியா்கள் வீல் சேரில் கமலா பீனை ஏற்றி விமான நிலைய மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கமலா பீன் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன்-மனைவியாக விமானத்தில் மனைவி திடீரென சென்னை  விமான நிலையத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.