சென்னை மெட்ரோ ரயில் திட்டம்..... கடனுதவி வழங்கிய ஆசிய வளர்ச்சி வங்கி!!!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்..... கடனுதவி வழங்கிய ஆசிய வளர்ச்சி வங்கி!!!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.  உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடனுதவி:

இந்நிலையில், இத்திட்டத்தின் விரிவாக்கத்துக்கு சுமார் ரூ2900 கோடி கடனுதவி வழங்க ஆசிய மேம்பாட்டு வங்கி முன்வந்துள்ளது.

ஒப்பந்தம்:

இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின கூடுதல் செயலர் ரஜத் குமார் மிஸ்ரா மற்றும்  ஆசிய வளர்ச்சி  வங்கி அதிகாரி நிளயா மிடாஷா அண்மையில் கையெழுத்திட்டனர்.

முதல் தவணை:

சென்னையில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை உருவாக்க ஆசியமேம்பாட்டு வங்கி ஒப்புதல் அளித்து சுமார் 780 மில்லியன் டாலர் மதிப்பிலான பல அடுக்கு நிதியுதவி திட்டத்துக்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இத்திட்டத்தின் ஒருபகுதியாக, முதல் தவணையாக ரூ.2,900 கோடி கடனுக்கு ஒப்புதல் அளிக்க உள்ளது.

தொடரும் பணி:

இந்தக் கடன் மூலம்  வழித்தடம் 4 மற்றும் 5 ல் சுரங்கப் பணிகளையும் உயர்மட்ட மேம்பால பணிகளையும் மேற்கொள்ள மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com