சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சு வலி.!!

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சு வலி.!!

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று வழக்கம் போல் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

தனது பணிகளை மேற்கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனை தரப்பில் இருந்து இதுவரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.