காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய பெண் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுங்க: பார்கவுன்சிலுக்கு கடிதம் எழுதிய சென்னை காவல்துறை...

காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய பெண் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல்துரையினர் பார்கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய பெண் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுங்க: பார்கவுன்சிலுக்கு கடிதம் எழுதிய சென்னை காவல்துறை...

சென்னையில் பணியில் இருந்த காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய பெண் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை காவல்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு அருகே   வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்த போலீசாரை, வழக்கறிஞர் தனுஜா ராஜன் என்பவர், விதிகளை மீறி, போலீசாரை தரக்குறைவாக பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தார். இதுதொடர்பாக  தனுஜா மற்றும் அவரது மகள் பிரீத்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் தற்போது பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை காவல் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.