சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை...கடும் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்!

சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ததால்  வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை...கடும் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாலை நேரத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் மழை பெய்தது,  கனமழையின் காரணமாக திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளான கே.ஜி. கண்டிகை, ஆற்காடு குப்பம், முருக்கம்பட்டு, மத்தூர், போன்ற பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருத்தணியில் தொடர் மழையின் காரணமாக நெடுஞ்சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் செங்கல் வியாபாரிகள் மற்றும் நெசவு தொழிலாளர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.  

இதேபோல் சென்னை ராஜா அண்ணாமலை புரம், அடையாறு, சாந்தோம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில்  மழை பெய்தது. வடபழனி, அசோக் நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில்  பெய்த மழையால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்தனர். சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயல், வானகரம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ஈக்காட்டுத்தாங்கல், குரோம்பேட்டை, பல்லாவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.