சென்னை அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து: போட்டோஸ் வைரல்  

சென்னை அண்ணாசாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னை அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து: போட்டோஸ் வைரல்   
Published on
Updated on
1 min read

சென்னை அண்ணாசாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

சாந்தி திரையரங்கம் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில், இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கணினி பாகங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் ஏற்பட்ட தீ, மளமளவென கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. தகவல் அறிந்து வந்த எழும்பூர் தீயணைப்பு துறையினர், ராட்சத கிரேன் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படும் சுமார் 40 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் யாரேனும் உள்ளனரா எனவும் தேடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தீப்பிளம்புடன், கரும்புகையும் வெளிவருவதால் பிற கட்டிடங்களுக்கும் தீ பரவுமோ என்ற அச்சம் நிலவி உள்ளது. கணினி விற்பனை நிலையமான அந்த கட்டிடத்தில் மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com