திருப்பதி திருக்குடை ஊர்வலத்திற்கு 2000 காவலர்கள் பாதுகாப்பு!

திருப்பதி திருக்குடை ஊர்வலம் மிக விமர்சையாக தொடங்கியது. பாதுகாப்பு பணியில் 2000 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி திருக்குடை ஊர்வலத்திற்கு 2000 காவலர்கள் பாதுகாப்பு!
Published on
Updated on
2 min read

சென்னை பூக்கடையில் உள்ள கேசவ பெருமாள் கோவிலில், இன்று  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்க இருக்கிறது. திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணி  யானைக்கவுனி தாண்டுகிறது.

யானைக்கவுனி காவல் நிலையம், பேசின் பிரிட்ஜ், யானைக்கவுனி பிரிட்ஜ் ரோடு வழியாக திருக்குடை ஊர்வலம் செல்கிறது. மாலை 6 மணிக்கு சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, ஓட்டேரி, பொடிக்கடை வழியாக சென்று இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் சென்றடைகிறது.

  • 26-ந்தேதி காலை 6 மணி, கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம், பெரம்பூர் அகரம் சந்திப்பு திரு.வி.க.நகர், வில்லிவாக்கம் சென்றடைகிறது.

  • 27-ந்தேதி காலை 6 மணிக்கு திருக்குடை ஊர்வலம் புறப்பட்டு பாடி, முகப்பேர், அம்பத்தூர், அத்திப்பட்டு, திருமுல்லைவாயல் சென்றடைகிறது. 

  • 28-ந்தேதி காலை 6 மணிக்கு, ஆவடி இந்துக்கல்லூரி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் வழியாக செல்கிறது. 

  • 29-ந்தேதி திருப்பாச்சூர் கனகம்மாசத்திரம் வழியாக கீழ் திருப்பதி செல்கிறது. திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. 

  • 30-ந்தேதி திருக்குடைகள் திருமலை சென்றடையும். அதன்பின் திருமலை மாடவீதியில் திருக்குடைகள் வலம் வந்து வஸ்த்திரம் மற்றும் மங்கலப் பொருட்களுடன், திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருப்பதி திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

அதைப்போல் பாதுகாப்பு பணியில்  வடக்கு மண்டல இணை ஆணையர் திருமதி ரம்யா பாரதி தலைமையில் ஏழு துணை ஆணையர், பதினாறு உதவியாளர், 52 ஆய்வாளர் உட்பட 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com