சென்னையில் இயல்பைவிட 77 சதவீதம் அதிக மழை பதிவு: சென்னை வானிலை ஆய்வு மையம்...

வடகிழக்கு பருவ மழையால் சென்னையில் இயல்பைவிட 77 சதவீதம் மழை அதிகமாக  பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்
சென்னையில் இயல்பைவிட 77 சதவீதம் அதிக மழை பதிவு: சென்னை வானிலை ஆய்வு மையம்...
Published on
Updated on
1 min read

சென்னை நுங்கம்பாக்கத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அவர்,குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு  ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்ய  வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

திருச்சி,புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று புவியரன் தெரிவித்தார்.

நாளை வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில்  இடி மின்னலுடன் கூடிய மழைக்கு  வாய்ப்புள்ளதகா புவியரசன் கூறினார்.மேலும் 
அடுத்து 2 நாட்களுக்கு குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால்  மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார். 

29 ஆம் தேதி உருவாக உள்ள  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு இருக்காது என  விளக்கம் அளித்த புவியரசன், சென்னையில் இயல்பைவிட 77 சதவீதம் அதிக மழை பொழிந்துள்ளதாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com