சென்னை: சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய கானா பாலா தோல்வி

சென்னையில் 72 வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட கானா பாலா தோல்வி அடைந்தார். 

சென்னை: சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய கானா பாலா தோல்வி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வரும் நிலையில், திமுக 90 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல், அதிமுக வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி எதிர்கட்சிகளை அதிர வைத்துள்ளது.

இந்நிலையில், சென்னை 72 வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட கானா பாலா முதல் சுற்றில் முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால், இரண்டாம் சுற்றில் அப்படியே தலைகீழாக மாறியது.  கானா பாலா 6095 வாக்குகள் பெற்றார். ஆனால், திமுக வேட்பாளர் 8303 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால், கானா பாலா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.