அதிகாரிகளுடன் களத்தில் நிற்கிறேன், இன்னமும் நிற்பேன்... முதலமைச்சரின் டுவிட்டர் பதிவு...

மக்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளுடன் களத்தில் நிற்கிறேன், இன்னமும் நிற்பேன்... முதலமைச்சரின் டுவிட்டர் பதிவு...
Published on
Updated on
1 min read

அதிக மழை பெய்யும் காலத்தில் களத்தில் பணியாற்றி வரும் அரசு அதிகாரிகளுடன் களத்தில் நிற்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டர் வலை பக்கத்தில் அவர், பதிவிட்டுள்ளார். அதில், சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் ஆயிரம் மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டியுள்ளார்.

இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச் சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள்தான் என புகழாரம் சூட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் அனைவருக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது என பதிவிட்டுள்ளார். 

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர்,  மக்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com