மலர்களை தூவி தண்ணீரை திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

மலர்களை தூவி தண்ணீரை திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். 

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது. அந்த அணையின் மூலம் 12 மாவட்டங்களில் உள்ள 17 லட்சத்து 37 ஆயிரம் லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறுகிறது. 

இதையும் படிக்க : விடுமுறை முடிஞ்சாச்சு...இன்று முதல் பள்ளிகள் திறப்பு... !

மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து இன்று டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. 

குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் 4 லட்சத்து 91ஆயிரத்து 200 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். டெல்டா பாசனப் பகுதியில் கடந்த ஆண்டு 58 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 65 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் குறுவை சாகுபடிக்காக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் பூக்கள் தூவி தண்ணீரை திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது முதலமைச்சருடன் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.