”பீடுநடை போடுகிறது திராவிட மாடல் அரசு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

”பீடுநடை போடுகிறது திராவிட மாடல் அரசு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் சாதி வேறுபாடுகளை போக்குவதே இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 34 இணைகளுக்கு திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 34 இணைகளுக்கு மங்கல நாண் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் மேடையில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். 3 ஆயிரத்து 986 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள வல்லுநர் குழு அனுமதி அளித்துள்ளது எனவும், இந்த நிதி ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்து 78 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற உள்ளன என்றும் தெரிவித்தார்.    

தொடர்ந்து பேசிய அவர், எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்டையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என பெருமிதம் தெரிவித்தார். திராவிட மாடல் அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளதாகவும், கல்வி, பொருளாதாரம், சமயம், சமூகம் என அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடனும் திராவிட மாடல் அரசு பீடுநடை போடுவதாக தெரிவித்தார். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது திமுக அரசு எனவும், எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்ககூடாது என்றும் அவர் தெரிவித்தார். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டி தமிழ் உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டுங்கள் எனவும், பாரதிதாசன் கூறியது போல்  வீட்டிற்கு விளக்காய் இருந்து பாடுபடுங்கள் என்றும்  பிரதமர் கேட்டுக்கொண்டார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com