ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி செலவில் கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகம்.. திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராணிப்பேட்டையில் 118 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி செலவில் கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகம்.. திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி நேற்று திருப்பத்தூர் மற்றும் வேலூரில் திட்டப்பணிகளை துவக்கி வைத்த முதலமைச்சர், இன்று ராணிப்பேட்டைக்கு வந்தார்.

தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில் 118 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில், நான்கு மாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், மாற்று திறனாளிகளுக்கு சாய்தள நடைமேடை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.