4 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்...

தி.மு.க. ஆட்சி அமைத்து, 4 மாதங்களில், 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

4 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்...

திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் 4 மாதங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில், 4 மாதங்களில் தி.மு.க.வின் சாதனைகளை விளக்கி, முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், திமுக தேர்தல் அறிக்கையில் இதுவரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதில், 8 வழிச்சாலை திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 5,570 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளத கூறினார்.

3 வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் வீடியோவில் பதிவிட்டுள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவை, பேரவையில் தாக்கல் செய்தது.அரசிற்கு ஆலோசனைகளை வழங்கிட முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்தது. மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தியது,அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது உள்ளிட்ட சாதனைகளை விளக்கி, வீடியோ வெளியிட்டள்ளார்.