மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!!

மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!!

லேசான காய்ச்சல் காரணமாக முதமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார்.

இருந்தாலும், கடந்த 4 நாட்களாக அங்கிருந்தபடியே பணிகளை மேற்கொண்டு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலகத்திற்கு இன்று வருகை தந்தார். அப்போது தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர்கள் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.