நான்கு பள்ளிக் கட்டிடங்கள் திறப்பு...காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்!

நான்கு பள்ளிக் கட்டிடங்கள் திறப்பு...காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்!

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சார்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர்:

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 13 கோடியே 64 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பில்,  மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் கட்டப்பட்ட வகுப்பறை, ஆய்வகக் கட்டிடங்கள் மற்றும் உண்டு உறைவிட பள்ளி கட்டிடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதேபோல, நாகப்பட்டினம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 2 கல்லூரி விடுதி கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

இதையும் படிக்க: 2021ல் 700 இடங்கள்...ஆனால் 2022ல் வெறும் 40 இடங்கள் தான்...அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேச்சு!

விடுதி கட்டிடங்களையும் திறந்து வைத்த ஸ்டாலின்:

இதேபோல, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்  சென்னை, மதுரை, திருவாரூர், தென்காசி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 9 கோடியே 92 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 விடுதி கட்டிடங்களையும் , திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 51 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 பள்ளி கட்டிடங்களையும், செங்கல்பட்டு, நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 17 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி கட்டிடங்களையும்  முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 

நடமாடும் பேருந்து:

இதைத் தொடர்ந்து வீடுகளுக்கே சென்று குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதை என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, சிகிச்சை அளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட நடமாடும் பேருந்து சாவியை முதலமைச்சர் வழங்கினார்.