Chennai Day : "அக்கம் பக்கம்" என்ற புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

Chennai Day :   "அக்கம் பக்கம்"  என்ற புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
Published on
Updated on
1 min read

சென்னை மாநகரின் 384-வது பிறந்த நாளை ஒட்டி, சென்னை மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை நகரம் தனது பிறந்த நாளை, சென்னை தினமாக கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையின் 384-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள  "அக்கம் பக்கம்"  என்ற புகைப்பட கண்காட்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். அதை தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

இதையும் படிக்க : ”நீட் விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர் குழம்பியுள்ளார்” ஈபிஎஸ்க்கு அமைச்சர் பதில்!
 
தொடர்ந்து தி இந்து குழுமத்தின் சார்பில், சென்னையின் முக்கிய நிகழ்வுகள், ஆவணப் புகைப்படங்கள் அடங்கிய 60க்கும் மேற்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படங்கள்  கண்காட்சியை முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தி இந்து குழும தலைவர் நிர்மலா லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com