திமுகவின் போர்வாளுக்கு 90வது பிறந்தநாள்...நேரில் வாழ்த்து சொன்ன முதலமைச்சர்!

திமுகவின் போர்வாளுக்கு 90வது பிறந்தநாள்...நேரில் வாழ்த்து சொன்ன முதலமைச்சர்!

திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணியின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பிறப்பு:

கடலூர் பழையப்பட்டினத்தில் கிருஷ்ணசாமி - மீனாட்சியம்மை தம்பதியினருக்கு கடந்த 1933 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிறந்தவர் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி.

பெயர் மாற்றம்:

இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சாரங்கபாணி. ஆனால் அவருடைய ஆசிரியரான ஆ.திராவிடமணி என்பவர், சாரங்கபாணி என்ற பெயரை மாற்றி கி. வீரமணி என்று மாற்றினார். 

திராவிடத்தில் இணைப்பு:

மேலும் பள்ளிகளில் தன் பேச்சாற்றலை வெளிப்படுத்திய கி.வீரமணியை அவரது தலைமை ஆசிரியர் மேலும் மெழுகேற்றி, திராவிட இயக்கத்துக்குள் அழைத்துச் சென்றார். அதன்பிறகு திராவிட இயக்கத்துக்குள் தன்னை படிப்படியாக வளர்த்துக்கொண்ட கி.வீரமணி, தற்போது திராவிட இயக்கத்தின் போர்வாளாக உள்ளார்.

இதையும் படிக்க: சித்து மூஸ்வாலா கொலை...மூளையாக செயல்பட்ட கோல்டி கைது?

90வது பிறந்தநாள்:

இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று தனது 90 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாளை முன்னிட்டு கி.வீரமணிக்கு பல்வேறு தரப்பினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் வாழ்த்து:

அதன்படி, சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்ற தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கி வீரமணிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதலமைச்சருடன் சென்ற திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ வ வேலு ஆகியோரும் கி.வீரமணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.