வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

Published on
Updated on
1 min read

சென்னை மாநில கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழு உருவச்சிலையை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 

முன்னாள் பிரதமரும் சமூக நீதி காவலருமான வி.பி.சிங்கிற்கு, பெருமை சேர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. 52 லட்சம் ரூபாய் செலவில், எட்டரை அடி உயரத்தில் அமைக்கப்பட்ட வெண்கல சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இந்த விழாவில், உத்திர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் வி.பி.சிங்கின் மனைவி சீதா குமாரி, மகன்கள் அஜய் சிங், அபய் சிங் மற்றும் அமைச்சர்கள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.  மறைந்த வி.பி.சிங்கின் 15-வது ஆண்டு நினைவுநாளில் அவரது உருவச்சிலை சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com