வ.உ.சி மைதானத்தில் ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சி - துவக்கி வைத்து பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

கோவை வ.உ.சி மைதானத்தில், நடைபெறும்  ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

வ.உ.சி மைதானத்தில்  ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சி - துவக்கி வைத்து பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

கோவை வ.உ.சி மைதானத்தில், பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் ஓவியங்களின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கென நேற்று சென்னையிலிருந்து கோவை புறப்பட்டு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இன்று அக்கண்காட்சியை தொடக்கி வைத்து பார்வையிட்டார். இதில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொண்டுவரப்பட்ட திட்டங்கள், சாதனைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த ஒவியங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் கீழடி, பொருநை , கொடுமணல், மயிலாடும்பாறை அகழாய்வுகளிகளில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  இதனைத்தொடர்ந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில்முனைவோர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது  பஞ்சாலைகளில் நிலவும் தேக்கநிலை மற்றும் அதனை சீரமைப்பது எப்படி? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.