
"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கிறதா என்பதை உறுதி படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக, "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதனை தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
இதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றாம் தேதி காலை சென்னையிலிருந்து வேலூருக்கு ரயிலில் பயணம் மேற்கொள்கிறார்.