
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சியில் அதிக இடங்களை பிடித்து திமுக கூட்டணி வெற்றி பெற்று தன்வசம் படுத்தியுள்ளது.
வெற்றி பெற்ற வேட்பாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னா் செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவா், பல ஆண்டுகளாக கைப்பற்ற முடியாமல் இருந்த ராஜபாளையம் நகராட்சியை திமுக கூட்டணி தற்போது கைப்பற்றி உள்ளதாக தொிவித்தார்.