திருநங்கைகள் உள்ளிட்ட 150 பெண் ஓட்டுநர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்டோக்களை வழங்கி ஊக்குவித்தார் .
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், பெண் ஓட்டுநர்கள் மற்றும் திருநங்கை ஓட்டுனர்களுக்கு புதிய ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது.
இதையும் படிக்க : திமுக எம்.பி. வீட்டில் ஐடி ரெய்டு!
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, 2 திருநங்கைகள் மற்றும் 148 பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ மற்றும் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.