சிவாஜி கணேசனின் மணிமண்டபத்திற்கு சென்று முதலமைச்சர் மரியாதை…  

கவிஞர் வைரமுத்துவுடன் சிவாஜி கணேசனின் புகைப்படங்களை முதலமைச்சர் பார்வையிட்டார்.
சிவாஜி கணேசனின் மணிமண்டபத்திற்கு சென்று முதலமைச்சர் மரியாதை…   
Published on
Updated on
1 min read

கவிஞர் வைரமுத்துவுடன் சிவாஜி கணேசனின் புகைப்படங்களை முதலமைச்சர் பார்வையிட்டார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைந்துள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அவரது முழு உருவ சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மணி மண்டபத்திற்கு வருகை தந்த முதலமைச்சருக்கு சிவாஜி கணேசனின் குடும்ப உறுப்பினர்களான மூத்த மகன் ராம்குமார் , இளைய மகன் பிரபு , நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்டோர் பொன்னாடை வழங்கி வரவேற்பளித்தனர்.

மேலும் முதலமைச்சர் ,  கவிஞர் வைரமுத்துவுடன்  சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தில் இடம்பெற்றிருந்த அவருடைய புகைப்படங்களை பார்வையிட்டார். சிவாஜி கணேசனின் பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் , அரசியல் தலைவர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மணிமண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. நிகழ்ச்சியின் நிறைவில் சிவாஜி கணேசனின் குடும்ப உறுப்பினர்கள் முதலமைச்சருடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.  அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் ,  தங்கம்தென்னரசு , சேகர்பாபு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் முதலமைச்சருடன்  நிகழ்வில் பங்கேற்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com