திருவள்ளுவர் தினம் : மரியாதை செலுத்திய முதலமைச்சர்...9 பேருக்கு விருதுகள் வழங்கினார்...!

திருவள்ளுவர் தினம் : மரியாதை செலுத்திய முதலமைச்சர்...9 பேருக்கு விருதுகள் வழங்கினார்...!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அய்யன் திருவள்ளுவர் விருது, பெரியார், அண்ணா உள்ளிட்ட 9 விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை: 

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலித்தினார்.அதை தொடர்ந்து   உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களும் திருவள்ளுவருக்கு  மரியாதை செய்தனர். 

விருது வழங்கிய முதலமைச்சர் :
 
அதனை தொடர்ந்து, 2023ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது மற்றும் தமிழக அரசின் ஒன்பது விருது உள்ளிட்ட 9 விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, திருவள்ளுவர் விருதை இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கு வழங்கினார். 

தொடர்ந்து, 2022ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதை  உபயதுல்லாவுக்கும், காமராசர் விருதை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும், மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும் வழங்கினார்.

இதையும் படிக்க : 3 சுற்றுகள் நிறைவு...முதலிடத்தில் இருப்பது யார்?...பரிசுகளை வாங்கி குவிக்க போவது யாரு?

இதேபோல் பாவேந்தர் பாரதிதாசன் விருது வாலாஜா வல்லவனுக்கும், திரு.வி.க. விருது நாமக்கல் பொ. வேல்சாமிக்கும், பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது  எஸ்.வி. ராஜதுரைக்கும்,  தேவநேயப்பாவாணர் விருது முனைவர் இரா. மதிவாணனுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொண்டு நிறுவனங்களுக்கு நிதி :

பின்னர் வள்ளளார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் 5 தொண்டு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன்,மா.சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.