'500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்' இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!

'500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்' இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் 500 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். 

தேசிய நகர்ப்புற சுகாதாரக் குழுமத்தின் மூலம் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள்  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக சென்னையில் 140 மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை, மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார். 

இதில் தியாகராய நகர் விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாகத் திறந்துவைக்கிறார். ஒவ்வொரு  நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

மேலும் படிக்க:குடியரசு தலைவருக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது!