மக்கள் பிரச்னைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைக்க தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தல்...

மக்கள் பிரச்னைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைக்க, மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.

மக்கள் பிரச்னைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைக்க தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தல்...

இது தொடர்பாக தன் கைப்பட கடிதம் எழுதியுள்ள தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மாவட்ட அளவிலேயே மக்களுடைய பிரச்னைகள் தீர்க்கப்படாத காரணத்தால், முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.

மாவட்ட அளவில் மனு அளிக்கும் பொதுமக்கள், நடவடிக்கை எடுக்காத காரணத்தால், பொறுத்தது போதும் என குக்கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கி புறப்படுவதாகக் கூறியுள்ள அவர், கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும், மக்கள் காத்திருப்பதை பார்க்கும் போது மனம் கனக்கிறது என உருக்கமாக தெரிவித்துள்ளார். எனவே, அதிக மனுக்களை தீர்த்து வைக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கேடயம் வழங்குவதை விட, குறைவான மனுக்கள் எந்த மாவட்டத்திலிருந்து வருகிறதோ, அந்த மாவட்ட ஆட்சியருக்கு கேடயம் அளிக்கும் நடைமுறையை கொண்டு வரும் அளவுக்கு, மாவட்ட ஆட்சியர்களின் பணி இருக்க வேண்டும் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.