அலங்கார ஊர்திகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்..  மாணவர்களுடன் செல்பி

அலங்கார ஊர்திகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. மாணவர்களுடன் செல்பி

சென்னை, மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
Published on

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக வடிவமைக்கப்பட்ட தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் தமிழகத்தின் 3 அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தலைமை செயலகத்திலிருந்து வீடு திரும்பிய போது அலங்கார ஊர்திகளை பள்ளி மாணவர்கள் பார்வையிடுவதை கண்டு அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், ஊர்திகளை பார்வையிட்டு மாணவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com