மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...

மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 5 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...

தமிழகத்தில்  20 லட்சத்திற்கும் மேற்பட்ட நீரிழிவு , சர்க்கரை நோய், புற்றுநோய், காச நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மருத்துவமனைகளை நாடவேண்டிய சூழல் இருந்து வருகிறது.  அவர்களின் நலனுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

நோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு  அவர்களின் வீடுகளுக்கு சென்று மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கும் இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.  இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 20 லட்சம் பேருக்கும் தொடர்ச்சியாக ஒரு கோடி பேர் பயன்பெறும் வகையில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.