சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழந்தைகள் ஏன் அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை - சீமான் கேள்வி!

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழந்தைகள் ஏன் அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை - சீமான் கேள்வி!

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் குழந்தைகளை ஏன் அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் பேச்சு:

சுதந்திர போராட்ட வீரர் ரெட்டைமலை சீனிவாசனின் 77 வது நினைவுநாளையொட்டி சென்னை கிண்டியில்  காந்தி மண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், பாஞ்சாகுளம் ஜாதி பாகுபாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பெரியார் மண் , சமூக நீதி என்று பேசி வரும் தமிழக அரசிடம் இது குறித்து கேள்வி எழுப்புங்கள் என்றார்.

அரசுப் பள்ளிகளின் நிலை மோசமாகி உள்ளது:

60 ஆயிரம் ரூபாய் ஊதியம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆறாயிரம் ரூபாய் ஊதியம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் நிலையில் அரசுப் பள்ளிகளின் நிலை இருப்பதாக கூறிய அவர், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் அரசு பள்ளிகளுக்கு அனுப்புவது இல்லை என கேள்வி எழுப்பினார்.