தாயை கொட்டும் மழையில் வெளியேற்றிய பிள்ளைகள்- உணவுக்காக கையேந்தும் பரிதாப நிலை

மயிலாடுதுறை அருகே 90 வயது மூதாட்டியை, பெற்ற பிள்ளைகள் வீட்டை விட்டு விரட்டியடித்தால்,  கொட்டும் மழையில் உணவுக்காக  அடுத்துவரிடம் கையேந்தும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், வாணாதிராஜபுரத்தை சேர்ந்தவர் தாவூத் பீவி.  90 வயதான இவர் கணவனை இழந்த நிலையில், தனது இளைய மகன் வீட்டில் வசித்து வந்தார்.

இளையமகன் சவுதியில்  வேலை செய்து வரும் நிலையில், கடந்த மாதம், மூதாட்டியை, அவரது மருமகள் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனால் மூதாட்டி அதே ஊரில் வசிக்கும் மூத்த மகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவங்கும் அவரை ஏற்றுக் கொள்ளாததால்,  மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கும் அவரை ஏற்றுக் கொள்ளாமல் விரட்டி அடித்துள்ளனர். இதனால், கொட்டும் மழையில் மூதாட்டி, உணவுக்காக அடுத்தவர் வீட்டில் கையேந்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனால், விரக்கியடைந்த மூதாட்டி, தன் பிள்ளைகள் தன்னை ஏற்றுக் கொள்ளாத நிலையில், தனது சொத்துக்களை அவர்களிடமிருந்து மீட்டுத் தர வேண்டும் என ஆட்சியரிம் மனு அளித்துள்ளார். கொட்டும் மழையில் பெற்ற தாயை பரிதவிக்கவிட்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.