கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை - ஆவின் தயாரிக்க போகும் கேக்குகள் ...

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை - ஆவின் தயாரிக்க போகும் கேக்குகள் ...

ஆவின், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட், கூட்டுறவு அமைச்சகம், தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் வர்த்தக முத்திரை உரிமையின் கீழ் ஒரு மாநில அரசு கூட்டுறவு ஆகும்.

தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பால் தயிர் மட்டுமின்றி புதுப்புது பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் விரைவில் ஆவின் நிறுவனம் கேக்குகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

ஆவினின் புதிய வகை கேக்குகள் :

கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு விரைவில் வருவதை ஒட்டி முதல் முறையாக ஆவின் நிறுவனம் நான்கு வகையான கேக்குகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வழியுள்ளது.இந்த நிலையில் ஏற்கனவே ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கேக் வகைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 வெண்ணிலா சாக்லெட் உள்ளிட்ட பிளேவர்களில் தயாராகும் இந்த கேக்குகளை இந்த மாதமே விற்பனைக்கு கொண்டுவர ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.பால், இனிப்பு வகைகளைத் தொடர்ந்து கேக் வகைகளும் விரைவில் அறிமுகம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்துமஸ் கேக் என்று அழைக்கப்படும் பிளம் கேக்கும் அறிமுகமாகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏதுவாக வெண்ணிலா, சாக்லெட் பிளேவர்களிலும் கேக் அறிமுகமாகிறது,நடப்பு மாதமே அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தகவல்.புதிய முயற்சி மக்களிடையே வரவேற்பைப் பெறும் என்றும் ஆவின் நிர்வாகம் நம்பிக்கை அளித்துள்ளது.