நாளை அதிகாலை கரையைக் கடக்கும் ‘சிட்ராங் புயல்’...

சிட்ராங் புயல் நாளை அதிகாலை வங்கதேசத்துக்கு அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை அதிகாலை கரையைக் கடக்கும் ‘சிட்ராங் புயல்’...

அந்தமான் கடலின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இது வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி பின்னர் படிப்படியாக வலுப்பெற்று சிட்ராங் புயலாக உருவாக உள்ளது.

இந்தப் புயல், நாளை வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்க கரையோரங்களில் பாதிப்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இன்று 6 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்...

இதனால், மேற்குவங்க கரையோரங்களில் பாதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசா மாநில அரசு அதன் 7 கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர், குர்தா, கேந்திரபாடா, பத்ரக், பாலசோர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வங்காள விரிகுடாவில் கடந்த அக்டோபர் மாதம் 2018 ஆம் ஆண்டு திட்லி புயலுக்கு பிறகு அக்டோபரில் உருவாகும் முதல் சூறாவளி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பணி நிரந்தரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சீமான்!தமிழக அரசிடம் வலியுறுத்தியது என்ன?