திருச்சியில்  திமுகவினர் இடையே மோதல் - கே. பாலகிருஷ்ணன்

திருச்சியில் திமுகவினர் இடையே மோதல் - கே. பாலகிருஷ்ணன்

Published on

கே.பாலகிருஷ்ணன் டுவிட்டர் பதிவில் 

திருச்சியில், திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டு அதை தொடர்ந்து காவல்நிலையத்திலும் புகுந்து தாக்கியுள்ளார்கள்.இந்த அத்துமீறிய செயல் கண்டனத்திற்குரியது. அனுமதிக்க முடியாதது. ஆளும் கட்சி மிதப்பிலேயே சிலர் இதுபோல நடந்துகொள்கிறார்கள்.

திமுக தலைமை உடனடியாக செயல்பட்டு, நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. காவலர்களின் புகார் அடிப்படையில் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை அவசியமானது.‌ மேலும் கூடுதலாகஇதுபோன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்கவே முடியாது என்று உறுதியாக அரசு‌ செயல்பட வேண்டும். 

பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அத்துடன் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தலை தடுத்தல்  சட்டத்தின் கீழும் வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com