தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை.. 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 4 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை.. 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இந்த 5 யூனிட்டுகள் மூலம் ஆயிரத்து 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 30 நாட்களாக நிலவி வரும் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது.

இங்கு உள்ள 5 யூனிட்டுகள் இயக்குவதற்கு நாள் ஒன்றிற்கு 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 10 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதால் 1வது அலகில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 4 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே  தூத்துக்குடி துறைமுகத்தின் ஒன்றாவது தளத்தில் 51 ஆயிரத்து 595 டன் நிலக்கரி இறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.