அச்சச்சோ.. 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பாம்.. எந்தெந்த மாவட்டம்னு தெரியுமா?

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அச்சச்சோ.. 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பாம்.. எந்தெந்த மாவட்டம்னு தெரியுமா?

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும்  விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்பு

மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும்  நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

நாளை நீலகிரி மாவட்டத்தில்  ஓரிரு இடங்களில் இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.   இதேபோல், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு,   தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மழை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல்  பகுதிகளிலும்,  கேரள -  கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.