கோவையை தொடர்ந்து சென்னையிலும் தொற்று பரவல் அதிகரிப்பு!

தமிழகத்தில் நேற்று ஆயிரத்து 608 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையை தொடர்ந்து சென்னையிலும் தொற்று பரவல் அதிகரிப்பு!

தமிழகத்தில் நேற்று ஆயிரத்து 608 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டது. அதில், நேற்று ஒரு நாளில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 807 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்றைய ஒருநாள் பாதிப்பு ஆயிரத்து 608 ஆக உள்ளது.  சென்னையில் மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 33 ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 512 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25 லட்சத்து 82 ஆயிரத்து 198 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 473 ஆக உள்ளது. இதனிடையே நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா  தொற்றுக்கு 22 பேர் பலியாகினர். இதனையடுத்து தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளது.