ஆட்சியர்கள் பணியிட மாற்றம்..! தலைமைச்செயலாளர் உத்தரவு..!

ஆட்சியர்கள் பணியிட மாற்றம்..! தலைமைச்செயலாளர் உத்தரவு..!

Published on

தமிழ்நாட்டில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தொழில்துறை ஆணையராக இருந்த அர்ச்சனா பட்நாயக், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளராகவும், தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில், வர்த்தகத் துறை இயக்குநராக நிர்மல்ராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக, பூஜா குல்கர்னியும், ஹர் சஹாய் மீனா உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலர் மற்றும் ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com