சக மாணவிகள் கேலி, கிண்டல்: பெற்றோர் செய்து வைத்த கட்டாய திருமணத்தால் தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி...

பெற்றோர் செய்துவைத்த கட்டாய திருமணம் பிடிக்கததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆவடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சக மாணவிகள் கேலி, கிண்டல்: பெற்றோர் செய்து வைத்த கட்டாய திருமணத்தால் தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி...
Published on
Updated on
1 min read

சென்னை வியாசர்பாடி, எஸ்.எம்.நகரை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ரோனிஷா. இவருக்கும் , ஆவடி அடுத்த சேக்காடு டிரைவர்ஸ் காலனியை சேர்ந்த உறவுக்கார இளைஞர் அகிலன் என்பவருக்கும், கடந்த 3மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.ரோனிஷா அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம் 2 ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில் தற்போது திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் அதனை மீறி உறவுக்கார இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்கு பிறகு, கணவர் வீட்டில் வசித்துக் கொண்டே , கல்லூரிக்கு சென்று வந்த ரோனிஷா சம்பவத்தன்று வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில், ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

படிப்பு முடிந்த பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ரோனிஷா தெரிவித்த நிலையில், பெற்றோர்கள் கட்டாயத்தின் பேரில் இந்த திருமணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே ரோனிஷாவிற்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றும் இதனால், திருமணமான நாள் முதலே அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் திருமணத்திற்கு பிறகு, கல்லூரிக்கு செல்லும் போது தன்னுடன் படிக்கின்ற தோழிகள் திருமண வாழக்கை குறித்து பேசி கேலி, கிண்டல் செய்து வந்ததால் மன உளைச்சல் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரோனிஷாவிற்கு திருமணமாகி 4மாதங்களே ஆகிற காரணத்தால், இந்த தற்கொலை சம்பவம் குறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓவும் விசாரணை நடத்தி வருகின்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com