ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா..!

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் மயிலாடுதுறை அருகே நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா...!

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு, இரத்த சோகை விழிப்புணர்வு முகாம் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவை குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அமுதவல்லி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் செம்பனார்கோவில் வட்டாரத்தில் இருந்து 60 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். 

அவர்களுக்கு இங்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு மாலை அணிவித்து அதிகாரிகள் தலைமையில் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. முன்னதாக நடைபெற்ற காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாரம்பரிய உணவுப் பண்டங்களை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.