சென்னை இலக்கியத் திருவிழா...! கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்..!

சென்னை இலக்கியத் திருவிழா...! கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்..!

சென்னை இலக்கியத் திருவிழாவானது தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட உள்ளது. 2023 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் தொடக்க விழா ஜனவரி 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. 

மூன்று நாட்கள் நடக்கும் இந்த இலக்கிய திருவிழாவில் 25 கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.30 போட்டிகள் நடக்க உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும், 25 பயிற்சி பட்டறைகளும் நடைபெறுகிறது.

சென்னை அண்ணாநகர், அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் ஜனவரி 4ஆம் தேதி காலை 9 மணி முதல் இந்த இலக்கிய திருவிழா தொடங்குகிறது. விழாவிற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை ஏற்கிறார். போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

இந்த இலக்கிய திருவிழாவில் ஒரு நிமிட பேச்சாற்றல், தமிழ் கவிதை போட்டி, கட்டுரை போட்டி, கதை கதையாம் காரணமாம், உடனடி ஹைக்கூ உள்ளிட்ட தமிழ் இலக்கிய போட்டிகளும், creative reels, creative interpretation உள்ளிட்ட ஆங்கில இலக்கியப் போட்டிகளும் என முப்பது போட்டிகள் ஜனவரி 4 ஆம் தேதி நடைபெற உள்ளன. இதில் கட்டற்ற மின் உள்ளடக்க உருவாக்கம், சமகாலச் சூழலில் படைப்பு உருவாக்கம், ஓலைச்சுவடி எழுத படிக்க பயிலரங்கம் உள்ளிட்ட தமிழ் பயிற்சி பட்டறைகள், Dramatic Reading , Theatre workshop உள்ளிட்ட ஆங்கில பயிற்சி பட்டறைகள் என 25 பயிற்சி பட்டறைகள் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளன.

இதையும் படிக்க : தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம்...! உத்தரவு பிறப்பித்த பொது சுகாதாரத்துறை...!