
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அங்காள ஈஸ்வரி கோவில் பகுதியில் திமுக பிரமுகர் வில்லாயுதம் என்பவரது வீடு உள்ளது. இவர் திமுகவின் மாவட்ட மீனவர் அணி செயலாளர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பதுக்கி வைத்து இலங்கைக்கு கடத்த முறபட்டதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் அவர் மீது அதிகமாக சொத்து சேர்த்தது முறையான வருமான வரி செலுத்தாதது, உள்ளிட்ட புகார்கள் மதுரை அமலாக்கத்துறையினருக்கு ரகசியமாக கிடைத்தது.
இதனையடுத்து இன்று வில்லாயுதம் என்பவர் வீட்டிற்கு வந்த வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறையினர் மற்றும் 25 மேற்பட்ட போலீஸார் காலை முதலே அவரது தங்கும் விடுதி மற்றும் குடோன், வீடு உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனையில் மேற்க்கொண்டனர். காலையில் இருந்து நடைபெற்ற தீவிர சோதனை நிறைவடைந்தது. சோதனையில் நிறைவில், 70 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.