
கூடலூரில் இருந்து ஊட்டிக்கு 52 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் மாவட்ட தலைமை மருத்துவமனையை கூடலூருக்கு மாற்றினால், உரிய நேரத்தில் தரமான சிகிச்சை பெற முடியும் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் மாவட்ட தலைமை மருத்துவமனை குன்னூருக்கு மாற்றப்படும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்தது. இது கூடலூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
இதனை கண்டித்து கூடலூர் காந்தி திடலில் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.