சீரகம், சோம்புவிலும் கலப்படமா...? அதிர்ச்சியூட்டும் வீடியோ!

சீரகம், சோம்புவிலும் கலப்படமா...? அதிர்ச்சியூட்டும் வீடியோ!

சேலத்தில் கலப்படம் செய்யப்பட்ட சீரகம் மற்றும் சோம்பு ஆகியவை மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கலப்படம்:

பொதுவாகவே நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் கலப்படம் என்பது இருந்து வருகிறது. உதாரணத்துக்கு பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என அடுக்கிக்கொண்டே போகலாம். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் கலப்படம் என்பது இருக்க தான் செய்கிறது. அதில் ஒரு சிலவற்றை நம்மால் தவிர்க்க முடியும். ஆனால், சிலவற்றை நம்மால் தவிர்க்க முடியாது. அப்படி தான் தற்போது நாம் அன்றாடம் சமையலுக்கு  பயன்படுத்தும்  சீரகம், சோம்புவில் கலப்படம் என்பது நடந்துள்ளது.

சீரகம் மற்றும் சோம்பு:

சீரகம் மற்றும் சோம்பு இரண்டும் இல்லத்தரசிகள் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் தவிர்க்க முடியாத பொருளாகும். இந்த பொருட்களிலும் தற்போது கலப்படம் என்பது அரங்கேறியுள்ளது.

சேமிப்பு குடோன்:

சேலத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் கீர்த்திகுமார் என்பவர் சீரகம், சோம்பு, கடுகு சேமிப்பு குடோனை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: திமுகவில் இருந்து விலகினார் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்..2021 தோல்வி தான் காரணமா?

கலப்படம் செய்வதாக புகார்:

இந்நிலையில்  இந்த சீரகம், சோம்பு, கடுகு சேமிப்பு குடோனில் இருந்து சமையல் பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள கடைகளுக்கு அனுப்பபடுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் செவ்வாய்பேட்டை பகுதியில் கீர்த்திகுமார் என்பவர் நடத்தி வரும் சேமிப்பு குடோனில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட பொருட்கள்:

அந்த ஆய்வில், 8,250 கிலோ சீரகமும்,  4,180 கிலோ சோம்பும் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது. அதேசமயம் கலப்படத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த வேதிப்பொருட்களும்,  செயற்கை வண்ண நிறமிகளும், மாவு பொருட்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு இருந்த கலப்பட பொருள் உணர்த்துவதற்கான இயந்திரம் மற்றும் எடை இயந்திரம் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வழக்குப்பதிவு:

குடோனில் கலப்பட பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோன் உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோம்பு சீரகத்திலும் கூட கலப்படம் அரங்கேறிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.